டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். டென்மார்க் நாட்டின் ஒடான்சி நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் அவர், இந்தோனேஷியாவின் மாரீஸ்காவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் இந்தோனேஷியாவின் வீராங்கனையை 21-11, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சாய்னா வீழ்த்தினார். இதன் மூலம் அவர் மகளிர் ஒற்றையர் போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் […]
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில், காலிறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனை ஓகுஹாராவை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சாய்னா முதல் செட்டை 17-21 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தார். இருந்தாலும் மனம் தளராத சாய்னா 21-16 மற்றும் 21-12 என அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் மூலம் சாய்னா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மேலும் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் […]
சியோல், கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சியோல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10–வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 80–ம் நிலை வீராங்கனையான கிம் கா யுன்னை (தென்கொரியா) சந்தித்தார். 37 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 21–18, 21–18 என்ற நேர்செட்டில் கிம் கா யுன்னை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். DINASUVADU
சியோல், கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சியோல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10–வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–12, 21–11 என்ற நேர்செட்டில் 39–ம் நிலை வீராங்கனையான கிம் ஹோ மின்னை (தென்கொரியா) வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 40 நிமிடம் நீடித்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் […]
இங்கிலாந்தில் நடைபெறும் ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி. இவர் நடப்பு சாம்பியன் தாய்சூயிங்கிடம் 21-14, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சாய்னா நேவால் தோல்வியைத் தழுவினார்.