முதல் முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அரசு சார்பில் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில் அவர் கூறியதாவது, மருத்துவ படிப்பிற்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என்ற முறையில், அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் கிடைத்தால் 300 மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவார்கள் என்றும், மேலும், பள்ளிகளை திறப்பது என்பது தற்போதைக்கு சாத்தியமில்லை. அது தொடர்பான ஆலோசனை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை […]