இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி ரூட் சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கிரிக்கெட் ஜோ ரூட் 60 பந்துகளில் ஒரு பவுண்டரி அடித்து 29 ரன்கள் எடுத்தார். […]
கிரிக்கெட்டில் ஆண்கள் எந்த அளவிற்கு சிறப்பாக விளையாடுகிறார்களோ, அதே அளவிற்கு பெண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடுகின்றனர். ஆனால், பலரும் கிரிக்கெட்டில் பெண்களை விட ஆண்கள் எடுத்த சாதனைகளைத் தான் அதிகம் பேசுவார்கள். அப்படி பேசப்படும் ஒன்றுதான், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்டர் சச்சின் டெண்டுல்கர். ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அசாதாரண சாதனையை ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கனைப் படைத்துள்ளார். அவர் தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான […]
நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று தற்போது அரையிறுதி போட்டி தொடங்கியுள்ளது. இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. குறிப்பாக இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு ஒரு லீக் போட்டில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது. அதிலும், இந்திய அணி நட்சத்திர வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் முன்னாள் ஜாம்பவான்களின் சாதனைகளை […]
சியான் விக்ரமை வைத்து இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் நிதி நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வந்த நிலையில், இறுதியாக நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த திரைப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தற்போது, […]
ஒருநாள் உலக கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டியானது, மும்பை வான்கடே மைதானத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்து அணி வீசும் பந்துகளை பதம் பார்த்து வருகிறது. முதலில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கி அணிக்கு நல்லத்தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ரோஹித் சர்மா பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி, 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதையடுத்து, 8.2-வது […]
விறுவிறுப்பாக நடந்து வரும் 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பைப் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பல சாதனைகளை படைத்தும், சமன் செய்தும் வருகிறார். அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் 119 பந்துகளில் 100 ரன்களை எட்டி, தனது 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இந்த சாதனையை தனது 35வது பிறந்தநாளில் கோலி பதிவு செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த, கிரிக்கெட் […]
இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2023ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி 119 பந்துகளில் 100 ரன்களை எட்டி, தனது 35வது பிறந்தநாளில் 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பலம் வாய்ந்த இந்தியா மாற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதியது. இதில் டாஸ் வென்றதால் இந்திய அணியின் ரோஹித் சர்மா, சுப்மன் கில் […]
ஒருநாள் உலகக்கோப்பையின் 33ஆவது லீக் போட்டியில் இலங்கை – இந்தியா அணிகள் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் வென்றால், முதல் அணியாக உலகக்கோப்பை அரை இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் இந்திய அணி பெறும். அதுமட்டுமில்லாமல், இலங்கைக்கு எதிரான இந்த போட்டியில் களமிறங்குவதன் மூலம், இந்திய அணியின் நட்சத்திர […]
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று அரை இறுதி போட்டிகளை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடப்பாண்டு உலகக்கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 6 முதல் 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 45 லீக் போட்டிகளில் இதுவரை 32 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று 33-ஆவது லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங் என அனைத்து […]
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக தொடங்க உள்ளது. நாளை உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன. உலகக்கோப்பைக்கான முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நாளை முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெற […]
ராஜஸ்தானுக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் சதம் அடித்து அசத்தல். இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ரஞ்சிக்கோப்பை தொடரானது இந்த ஆண்டு 2022-2023 ஆம் ஆண்டு சீசன் நேற்று தொடங்கியது. நேற்று போட்டியில் கோவா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த ரஞ்சித் தொடரில் மும்பை அணியில் இருந்து விலகிய முன்னாள் இந்திய வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் கோவா அணிக்காக விளையாடினார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த […]
விராட் கோலி, ராகுல் டிராவிட் ஐ பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியாவிற்கான அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார். நேற்று நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடிய 3 வது டி-20 போட்டியில் விராட் கோலி 63 ரன்கள் குவித்ததன் மூலம் 24,078 ரன்களுடன் இந்தியாவிற்கான அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கிறார். 24,064 ரன்களுடன் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.சர்வதேச கிரிக்கெட்டில், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில், இந்திய ஜாம்பவான் […]
கிரிக்கெட் வீரர்களை ட்விட்டர் பிரச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்க வேண்டாம் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த போராட்டம் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நேற்று, உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகி ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் ஏன் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசாமல் இருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். why aren’t we talking about this?! […]
இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால், நமது உள்நாட்டு விவகாரங்களில் பங்கேற்க இயலாது. இந்தியாவை பற்றி இந்தியர்களுக்கு தெரியும். இந்தியர்களே முடிவு எடுப்பார்கள். ஒரு தேசம் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று கூறி, வேளாண் சட்டங்கள் எதிர்த்து விவசாயிகள் போராட்டம் மற்றும் டெல்லி […]
2009 ஆம் ஆண்டு, நவம்பர் 20 ஆம் தேதியன்று சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்கள் எட்டிய முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெற்றார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்தவர், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் கிட்டதட்ட 30,000 ரன்களை கடந்துள்ள சச்சின், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற தனது 200 டெஸ்ட் போட்டியில் தனது ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்தார். மொத்தம் 200 […]
10ம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வியெழுப்பியுள்ளது. இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களும், பரிசுகளும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு, பரிசுகளை வழங்குகிறது. ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையை சேர்ந்த மதுரேசன் […]
எல்போ கார்டை பற்றி கூறிய நபரை சந்திக்க ஆசைப்படுகிறேன் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார் சச்சினுக்கு ஆலோசனை வழங்கிய நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நேற்று கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில்,எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன் அவரை […]
ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் தமிழில் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வழக்கமாக கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை ஹர்பஜன் சிங் தான் தமிழில் ட்வீட் செய்து அசத்துவார்.இதற்காகவே இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இவரை தொடர்ந்து தமிழில் விக்ரம் நடித்து வரும் படத்தில் அறிமுகமாக உள்ள கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அதன் அறிவிப்பை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ட்வீட் […]