இலங்கை மகா சபை தேர்தலை நடத்த வேண்டுமென இலங்கையின் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்க்கட்சி தலைவரான மகிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோகித்த ராஜபக்சவுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. சிங்கள முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் இந்த திருமணம் நடந்தது. இதையடுத்து, இந்து முறைபடி நடந்த திருமண நிகழ்வில் ராஜபக்சவின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர் கட்சி தலைவர் ராஜபக்ச, கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலையே அரசு உடனே நடத்த வேண்டும், என கூறியுள்ளார். […]