மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, ஐயப்பன் கோயிலின் நடையை திறந்து வைத்தார். அதன்படி, பதினெட்டாம் படி இறங்கி சென்று கோயில் முன் உள் அழி குண்டம் ஏற்றப்பட்டு மண்டல பூஜை தொடங்கும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடியுடன் வரும் பக்தர்கள் நாளை முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வெர்ச்சுவல் […]
சபரிமலை கோயிலில் தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நிறைவு பெற்றது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று நடைபெற்று முடிந்தது, நேற்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு, 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாட்களாக நடைபெறும் இந்த மண்டலபூஜை, இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், […]
கொரோனா தொற்றுநோயால் ஆறு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பின்னர் இன்று காலை பக்தர்களுக்காக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரு சில பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பிரார்த்தனை செய்தனர். மேலும், நேற்று மாலை மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்ட இந்த கோயில், பக்தர்கள் அக்டோபர் 21 வரை பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட சந்நிதானம் பக்தர்களுக்கு பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டது என்று கோயிலின் திருவிதாங்கூர் […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று சந்நிதானம் இன்று திறக்கப்படுகிறது. கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த ‘சபரிமலை ஐயப்பன் கோயில்’ நாளை முதல் ஐந்து நாள் மாதாந்திர பூஜைகளுக்கு திறக்கப்படுகிறது. இந்நிலையில், சபரிமலை கோயிலின் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும். ஆனால், மலையாள மாதமான ‘துலாம்’ முதல் நாளான நாளை காலை 5 மணி முதல் மட்டுமே பக்தர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று சன்னதியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், பக்தர்கள் எந்தவிதமான […]