தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சபரிமலை ஐயப்பன் ஊர்வலம் இன்று பிற்பகல் பம்பை வரவுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு திரளான பக்தர்கள் இருமுடி தாங்கி தரிசனம் செய்து வருகின்றனர். நாளை சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது . இந்நிலையில், திருவிதாங்கூர் மகாராஜா சபரிமலை ஐயப்பனுக்கு வழங்கிய தங்க அங்கி, சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து கடந்த 21ஆம் தேதி பத்தனம்திட்டா பார்த்தசாரதி ஆலயத்தில் இருந்து சுவாமி ஊர்வலம் புறப்பட்டது. அந்த […]
கார்த்திகை 1ஆம் தேதியான இன்று முதல் தமிழகமெங்கும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர். இன்று கார்த்திகை மாதம் 1ஆம் தேதி. இன்று முதல் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவர். மகரவிளக்கு தரிசன பூஜைக்காக நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். மலை அணிந்து தங்கள் […]
சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும்16ந்தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான தகவல் படி:சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அக்.,16ந்தேதி திறக்கப்படுவதாகவும்.அன்றைய தினம் எவ்வித பூஜையும் நடக்காது என்றும் தெரிவித்துள்ள தேவஸ்தானம் அக்,.17ந்தேதி முதல் அக்,.22ந்தேதி வரை 5நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளோடு தினந்தோறும் 250 பக்தர்களுக்கு சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள தேவஸ்தானம் சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் கொரோனா […]
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக இன்று மாலை 5:30 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது. இது தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இதையடுத்து நாளை முதல் 18 தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இந்த நாட்களில் தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பல பூஜைகள் நடைபெற உள்ளது. […]
கேரளாவின் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று முன்தினம் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. ஐயப்பனை தரிசனம் செய்ய இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி ஆந்திராவின் திருமலையில் இருந்து 13 அய்யப்ப பக்தர்கள் அடங்கிய குழு ஓன்று பாதயாத்திரையாக நடந்து வருகின்றனர்.இவர்களுடன் ஒரு தெரு நாயும் சேர்ந்து பாதயாத்திரையாக 480 கிலோமீட்டர் தூரம் வந்து உள்ளது. இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில் […]
கேரள சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மணடலபூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து, இன்று பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அதிகமாக இருந்தது. இன்று முதல் மகர ஜோதி தரிசனம் வரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்ப்பு 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டதால், ஏற்கனவே உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பான அனைத்து வயது […]
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் வருடா வருடம் இந்த மாதம் முதல் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். மண்டல பூஜைக்காக தற்போது ஐயப்பன் சன்னதி நடை திறக்கப்பட்டது. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் ஸ்வாமி சன்னதியில் தரிசனத்திற்க்காக குவிந்தனர். பக்தர்களின் சரணகோஷங்களுக்கு இடையே மண்டல பூஜைக்காக தற்போது நடை திறக்கப்பட்டது. சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.