சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குசாவடியை அதிவிரைவு படையினர் ஆய்வு நடத்தியுள்ளனர். தமிழகத்தில், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குசாவடியை அதிவிரைவு படையினர் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த வாக்குச்சாவடியில், காலை முதல் முக்கிய பிரபலங்கள் வாக்களித்து வந்த நிலையில், மேலும் சில பிரபலங்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்குச்சாவடியில் குறிப்பிட்ட எல்லைக்குள் தேவையில்லாத நபர்கள் அதிகமாக கூடி வருவதால், இந்த ஆய்வை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.