சென்னை : மேகா ஆகாஷ் தனது காதலர் சாய் விஷ்ணுவுடன் நேற்று (ஆகஸ்ட் 22ம் தேதி) நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்த வண்ணம் இருந்தது. இருப்பினும், அவர் தனது திருமணம் செய்தி குறித்த வதந்திகளுக்கு பதிலளிக்கவில்லை. ஆனால், தற்போது அவரது திருமணம் குறித்த கிசுகிசுக்கள் உண்மையாகிவிட்டது. ஆம், நடிகை மேகா ஆகாஷூக்கு காதலர் சாய் விஷ்ணுவுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. […]