கடந்த 2018ஆம் ஆண்டு முன்னாள் பாஜக நிர்வாகியாகவும், நடிகராகவும் உள்ள எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு பரப்பும் வகையில், சர்ச்சைக்குரிய பதிவை கூறியிருந்தார். இதனை எதிர்த்து, பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரானது அரசியல் பிரமுகர்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்.. […]
பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேட்டி அளித்த போது பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் பத்திரிகை துறையில் வேலை பார்க்கும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார். இதனால், எஸ்.வி. சேகருக்கு எதிராக கண்டங்கள் எழுந்தது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் எஸ்.வி. சேகர் மீது புகார் கொடுக்கப்பட்டது. […]
இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். பின்னர், திண்டுக்கல்லில் ரூ.8.69 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் அதில் மாற்றமில்லை என கூறினார். இதையடுத்து, நாங்கள் எல்லாம் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ்.வி.சேகர் பெரிய தலைவர் இல்லை, அவரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏதாவது […]
என் ஓய்வூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல என எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் எஸ்.வி.சேகர் அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என கூறி சர்ச்சை வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், சென்னையில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.வி.சேகரை ஜெயலலிதா அடையாளம் காட்டிய பிறகு தான் அவர் மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். எஸ்.வி.சேகர் அதிமுக கொடியை […]