காலாவதி சுண்ணாம்பு சுரங்கம் மியாவாக்கி காடாக்கப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். பெரியார் நகரில் 7 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் மாவட்டத்தில் காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மியாவாக்கி முறையில் குறுங்காடாகப்படும். சுண்ணாம்புக்கல் வெட்டி முடிக்கப்பட்ட 1,000 சுரங்கத்தை மியாவாக்கி காடாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எஸ். எஸ் சிவசங்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பல்வேறு அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி லேசான அறிகுறிகள் இருந்ததால் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் கூட அவர் கலந்துகொள்ள வில்லை. இதைத்தொடர்ந்து, தன்னை தானே வீட்டிலேயே அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.