சஞ்சாரம் நாவலுக்காக பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருதினை பெற்றார். சாகித்ய அகாடமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். அதன்படி, கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழில் பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் என்ற நாவல் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது. நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையை இந்த நாவல் விளக்குகிறது. இந்தநிலையில், டெல்லியில் சாகித்ய அகாடமி விருது வழங்கும் நடைபெற்றது. சஞ்சாரம் […]
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்டவர் எஸ்.ராமகிருஷ்ணன் இவரது பெற்றோர் சண்முகம் மற்றும் மங்கையர்க்கரசி இவருடைய தந்தை வழித் தாத்தா திராவிட இயக்கத்தில் அதிக பற்றுடையவர்.ஆனால் தாய் வழித் தாத்தாவோ சைவ சமயப் பற்றுடையவர். இது எழுத்தாளருக்கு நல்ல ஒரு தெளிவினை ஏற்படுத்த உதவியது.இவர் இந்த இரு வீடுகளிலும் இலக்கியங்கள் மற்றும் சமூகச் சிந்தனைகளைப் படித்தும் அவற்றை பேசக்கூடிய சூழல் நிலவியதாகக் அவரே குறிப்பிடுகிறார். தற்போது எழுத்தாளர் தனது மனைவி சந்திரபிரபா மற்றும் குழந்தைகள் ஹரி […]