Tag: S. Ramadoss

மக்கள் நம்பிக்கையை நிறைவேற்றி நல்லாட்சி வழங்குங்க! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து!!

நரேந்திர மோடி: நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற (பிரதமர் மோடி) உங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்த முதல் […]

#BJP 4 Min Read
Default Image

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்குங்க! பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கபடும் என தமிழக அரசு அறிவித்து இருக்கும் நிலையில், பொங்கல் பரிசு தொகை 3,000 வழங்கவேண்டும் 1,000 வழங்கவேண்டும் என பல அரசியல் தலைவர்கள் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் பரிசாக 3,000 வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அவரை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  […]

#TNGovt 7 Min Read
dr ramadoss

சிலையை அவமதிப்பதும், சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள்- ராமதாஸ் காட்டம் .!

கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாத ஒருவரின் சிலையை அவமதிப்பதும், சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாமக நிறுவனர் […]

S. Ramadoss 6 Min Read
Default Image

சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது – மகாராஷ்டிரா அரசியல் குறித்து ராமதாஸ் ட்வீட்

சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்று  மகாராஷ்டிரா அரசியல் குறித்து ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் நீண்ட நாட்களாக  அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில் இன்று அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார்.இந்த நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் .அவரது பதிவில் , மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா. காலை நாளிதழ் […]

#BJP 2 Min Read
Default Image

அரசு  மருத்துவர்களுடன் பேசி தீர்வுகாண வேண்டும் – ராமதாஸ் அறிக்கை

அரசு  மருத்துவர்களுடன் பேசி தீர்வுகாண வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு , மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு  50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஊதிய உயர்வு, மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் […]

#PMK 3 Min Read
Default Image

6 மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்- ராமதாஸ்

தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை கடுமையாக எதிர்க்கும் காங்கிரசின் நிலைப்பாட்டை திமுக ஏற்கிறதா? என்று  கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்கும் போது வட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.எய்ம்ஸ் மருத்துவமனைக்கான […]

#PMK 2 Min Read
Default Image

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடாமல் விபத்துகளை குறைக்கும் முயற்சி ஈடேறாது-ராமதாஸ்

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடாமல் விபத்துகளை குறைக்கும் முயற்சி ஈடேறாது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள சட்டத்திருத்தத்தின்படி கடந்த காலங்களை விட மிக அதிக அளவில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூடாமல் விபத்துகளை குறைக்கும் முயற்சி ஈடேறாது.மோட்டார் வாகன சட்டத்தை திருத்துவதில் காட்டிய வேகத்தை நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதிலும் காட்ட வேண்டும் என்று […]

#PMK 2 Min Read
Default Image

7 பேர் விடுதலையில் ஓராண்டுக்குப் பிறகும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல – ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து  ஓராண்டு நிறைவடைகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,எத்தனை சட்ட வல்லுனர்களிடம் கருத்து கேட்டாலும் கூட, இந்த விஷயத்தில் ஓராண்டுக்குப் பிறகும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல. 29 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களை இனியும் சிறைக் கொட்டடியில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறல். தமிழக ஆளுனர் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும். 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை ஆளுனர் உடனடியாக […]

#PMK 2 Min Read
Default Image

300-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள்காலி- ராமதாஸ் வேதனை

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் 300-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாக இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.அண்ணா பல்கலையில் 300-க்கும் மேற்பட்ட  இடங்கள் காலியாக இருப்பது வருத்தமளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகங்களில் உள்ள 300 காலி இடங்கள், முன்னணி தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள காலி இடங்கள் ஆகியவற்றை நிரப்ப தமிழக அரசும், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி […]

#PMK 2 Min Read
Default Image

தமிழகத்தின் பிற பெரிய மாவட்டங்களையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்-ராமதாஸ் கோரிக்கை

நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில் ,வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தனித்தனி மாவட்டங்களாக பிரிக்கப்படும் .இந்த 2 புதிய மாவட்டங்களையும் சேர்ந்து தமிழகத்தில் மொத்தமாக 37 மாவட்டங்களாக உயரும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற […]

#ADMK 2 Min Read
Default Image