போராட்டம் பெரிதளவில் சென்று விட கூடாதென பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரிகள் மாணவர்களுக்கு சிறப்பு விடுமுறையை அளிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார் எஸ் பி செல்வராஜ். ஒட்டுமொத்த தமிழ் மாநிலத்தையே சில தினங்களாக நிலைகுலைய வைய்த்த சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த பல ஆண்டுகளாக சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் […]