தளபதி விஜயின் தந்தையும், தமிழ் திரைப்பட இயக்குனரான S.A.சந்திரசேகர், ஒரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது திருப்பதி கோயிலில் காணிக்கை செலுத்துவது சாமிக்கு லஞ்சம் கொடுப்பதாக கூறியிருந்தார். இதனால் அவர் மீது நடச்வடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பின் சார்பாக நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, அவரின் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தால் அவரின் மீது வழக்கு பதிவு செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.