வருகின்ற நவம்பர் 17ம் தேதியுடன் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி காலம் முடிவடைகிறது. இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக ஏஸ்.ஏ பாப்டேவை நியமிக்க ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்துள்ளார். எனவே, ஏஸ்.ஏ பாப்டே வருகின்ற நவம்பர் 18ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இவரது பதவிக்காலம் ஏப்ரல் 23, 2021ம் ஆண்டு வரை நீடிக்கும் என அறிவிக்கப்படுள்ளது.