உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கோரோடில் ரஷ்ய போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் எஸ்-300 ஏவுகணை மூலம் உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. விமானத்தில் 65 உக்ரைன் போர்க் கைதிகள், ஆறு பணியாளர்கள் மற்றும் மூன்று இராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த போர் கைதிகள் உக்ரைனில் நடந்து வரும் போரின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவத்தால் பிடிக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான […]
உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வந்த தாக்குதல் சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் இலியுஷின் Il-76 இராணுவ போக்குவரத்து விமானம் […]
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க் நகரம் மீது உக்ரேனியப் ராணுவ படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் காயமடைந்ததாக டொனட்ஸ்க் நகர நிர்வாகத் தலைவர் டெனிஸ் புஷிலின் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சம்பவம் குறித்து உக்ரைனில் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டொனட்ஸ்க் நகரின் மேயரின் கருத்துப்படி, உக்ரேன் ராணுவம் இங்கிருக்கும் கடைகள் அமைந்துள்ள பரபரப்பான பகுதியில் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார். தாக்குதலை […]
உக்ரேனின் கருங்கடல் துறைமுகமான ஒடேசா நகரம் மீது ரஷ்யா ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் சுமார், 20 அடுக்கு மாடி கட்டிடங்கள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 124 ஆண்டுகள் பழமையான ஒடேசா நுண்கலை அருங்காட்சியகமும் சேதமடைந்ததுள்ளது. அது மட்டும்மல்லாமல், ஒரு தானிய கிடங்கு மற்றும் தானியங்களுடன் கூடிய லாரிகள் […]
உக்ரைன் மற்றும் காசாவில் போர் நடைபெற்றுவரும் நிலையில் ரஷ்யா அணுகுண்டு சோதனை நடத்தியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அணுசக்தி சோதனைக்கு எதிராக ரஷ்யா, உலக அளவில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, அணு ஆயுதங்களை தயாரிப்போம் எனவும், ஆனால் அணு ஆயுத சோதனை செய்ய போவதில்லை என்று ஒப்பந்தம் செயப்பட்டு இருந்தன. இந்த நிலையில், அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBT) ஒப்புதலை ரத்து செய்யும் மசோதாவிற்கு ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். தற்போது, அந்த ஒப்பந்தத்தின் […]
உக்ரைன் தெற்கு மைகோலேவ் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்ததாக மைகோலேவ் கவர்னர் விட்டலி கிம், செய்தியார்களிடம் உறுதி செய்துள்ளார். நேற்று இரவு 8:30 மணிக்கு மைகோலேவ் குடியிருப்பு பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் மொத்தமும் இடிந்துள்ளது. இதனையடுத்து, மீட்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்ற நிலையில், இந்த இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த […]
ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி அழித்திட மேற்கு நாடுகள் சதி செய்வதாகவும் அதிபர் புதின் புகார். உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவில் படைகளை திரட்டுமாறு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ராணுவ பயிற்சி பெற்று வேறு வேளைகளில் ஈடுபட்டுள்ள போரிடும் உடல் தகுதியுள்ளவர்களை திரட்ட அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்று ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றி, படையில் இருந்து விலகி வேறு வேறு பணிகளில் உள்ளவர்களையும் திரட்ட அதிரடியாக ஆணையிட்டுள்ளார். ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி, இறுதியில் […]
ரஷ்யாவை எதிர்த்துப் போரிடும் உக்ரேனிய இராணுவத்திற்கு உதவும் வகையில் 600 மில்லியன் டாலர் ஆயுத உதவியை அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது. இந்த தொகுப்பில் ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்ஸ் (ஹிமார்ஸ்), கிளேமோர் சுரங்கங்கள், 105 மிமீ பீரங்கி சுற்றுகள் மற்றும் 155 மிமீ துல்லிய வழிகாட்டும் பீரங்கி சுற்றுகள் ஆகியவை அடங்கும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, அமெரிக்கா உக்ரைனுக்கு 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 55-வது நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில்,உக்ரைனின் கிழக்கு பகுதியைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் முயல்வதாகவும்,எத்தனை ரஷ்ய படைவீரர்கள் வந்தாலும்,நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,வீடியோ வெளியிட்டுள்ள ஜெலென்ஸ்கி:”ரஷ்யப் படைகள் டான்பாஸிற்கான போரைத் தொடங்கிவிட்டன,அதற்காக அவர்கள் நீண்ட காலமாகத் தயாராகி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் கணிசமான அளவு ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டு தாக்குதலை நடத்த கவனம் செலுத்துகின்றன. ஆனால்,அவர்கள் எத்தனை ரஷ்ய படைவீரர்களை அந்தப் […]
ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் ஏற்படாததால், இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் சந்திப்பு இன்னும் 2 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்றும் ரஷ்ய தூதுக்குழு தற்போது பெலாரஸில் காத்திருப்பதாக ரஷ்ய ஊடகம் தகவல் கூறியுள்ளது. இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10-ல் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் […]
உக்ரைன் மீது கடந்த 24-ஆம் தேதி படையெடுப்பு நடத்திய ரஷ்ய படைகள், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டு,உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய நிலையில்,கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்ய நட்பு நாடான பெலாரஸில் இரு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ரஷ்ய […]
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது. போர் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் செலன்சிகியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் நிலவி வரும் சூழல் […]
கடந்த 24-ஆம் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதை அடுத்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, ரஷியா உக்ரைன் உடனான […]
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ரூ.5,055க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் சவரனுக்கு ரூ.680 அதிகரித்து, 8 கிராமுகளை கொண்ட ஒரு சவரன் ரூ.40,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக பங்குசந்தைகளும் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று கடும் சரிவை கண்டுள்ள நிலையில், தங்கத்தின் விலையும் ஒரு சவரனுக்கு ரூ.40,440 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவில் தங்களது நிறுவன பொருட்கள் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கான ஏற்றுமதிகள் அனைத்தையும் நிறுத்துவதாக சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி, சாம்சங் நிறுவனத்தில் செல்போன், டிவி உள்பட அனைத்து தயாரிப்புகளின் விற்பனையும் ரஷியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு $6 மில்லியன் நன்கொடை அளிக்கிறது என்று சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச்.பி., […]
உக்ரைனில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற அந்நாட்டு அரசு அனுமதி மறுப்பதாக ரஷ்யா குற்றசாட்டியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தெளிவான போர் திட்டங்களை வகுத்து வருகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்ய கூட்டமைப்பு மீது நேரடியான பாதுகாப்பு அச்சறுத்தலை மேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும் உக்ரைன் ராணுவ குழுவினர் தற்போது வரை அமெரிக்காவின் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொண்டிருக்கின்றனர், ஐரோப்பாவை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார். இதனிடையே, ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், […]
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க சிறப்புக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதில் தமிழக மாணவர்களுக்கும் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உக்ரைனில் உள்ள தமிழக […]
உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தை கூட்டி உக்ரைன் விவகாரம் மற்றும் ஆபரேஷன் கங்கா ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விவாதித்து வருகிறார். உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சுற்றிவளைத்து ரஷ்யா படைகள் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தெற்கு மற்றும் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் விசா இல்லாமல் போலாந்து நாட்டிற்கு வர அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. […]
யுடியூப், முகநூலைத் தொடர்ந்து, தற்போது கூகுள் நிறுவனமும் ரஷிய ஊடகங்கள் விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. மேலும், உக்ரைனின் அதிக மக்கள் தொகை […]