உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல். திங்கள்கிழமை காலை ரஷ்யா “காமிகேஸ்” ட்ரோன்கள் மூலம் கீவ் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய உயர் அதிகாரி வெளியிட்ட முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதியின் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக் கூறுகையில்,”இது அவர்களுக்கு உதவும் என்று ரஷ்யர்கள் நினைக்கிறார்கள், ஆனால் இந்த நடவடிக்கைகள் விரக்தியை ஏற்படுத்துகின்றன” என்று தெரிவித்துள்ளார். “எங்களுக்கு கூடிய விரைவில் வான் பாதுகாப்பு […]
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இந்த வாரம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த ரஷ்யா கோரிக்கை வைத்த நிலையில், அதனை எதிர்த்து இந்தியா வெளிப்படையான வாக்கெடுப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பிறகு ரஷ்யா தற்போது உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அண்மையில் உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை […]
சுனாமி உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது மாதிரி இந்தப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும் என வைரமுத்து ட்வீட். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தங்களது உடைமைகளையும், உறவுகளையும் இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் போரை நிறுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், போரை […]
உக்ரைனுக்கு மேலும் ரூ.26,000 கோடிக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவிப்பு. ரஷ்யா மூன்றாவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு மேலும் ரூ.26,000 கோடி ராணுவ உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. போரினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவரும் உக்ரைனுக்கு சுமார் ரூ.4,500 கோடி நிதியுதவியாக வழங்க அமெரிக்க ஏற்கனவே ஒப்புதல் அளித்து அறிவித்திருந்தது. அதாவது, உக்ரைனின் ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக சுமார் ரூ.1900 கோடி வழங்கப்படும் என்றும் பாதுகாப்பு, […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து 16 தமிழர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் சிக்கி இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் இருந்து ஹங்கேரி, ருமேனியா வந்த தமிழ்நாட்டை 17 மாணவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். ருமேனியாவில் இருந்து 5 மாணவர்களும், ஹங்கேரியில் இருந்து 11 மாணவர்களும் விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்படுகின்றனர். உக்ரைனில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு விமானத்தில் வந்துசேரும் 16 மாணவர்களை தமிழகம் அழைத்துவர […]
தலைநகர் கீவ் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு. ரஷ்யா 3 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தாலும் தலைநகர் கீவ் எங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவே உக்ரைன் விரும்புவதாகவும் காணொலி வாயிலாக பேசிய அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். கிட்டத்தட்ட உக்ரைன் மீது ரஷ்ய நடத்தி வரும் போரானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏனெனில் ரஷ்யா தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் மீது தான் கடுமையான […]
ரஷ்யா தாக்குதலில் உக்ரனை சேர்ந்த 198 பொதுமக்கள் உயிரிழப்பு என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவிப்பு. உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து முன்னேறிக்கொண்டே வருகிறது. ஒருபக்கம் உக்ரைன் – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், மறுபக்கம் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன என […]
உலக முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட தடை விதித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலக முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட தடை விதித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். நாங்கள் தற்போது உலகில் எங்கிருந்தும் எங்கள் தளங்களில் விளம்பரங்களை வெளிப்படுத்துவதற்கோ அல்லது பணமாக்குவதற்கோ ரஷ்ய ஊடகத்துக்கு தடை விதிக்கிறோம் என்று ஃபேஸ்புக் பாதுகாப்புக் கொள்கைத் தலைவர் […]
எனக்கு தேவை ஆயுதங்கள் தான், பயணம் அல்ல என அமெரிக்கா கூறியதற்கு உக்ரைன் அதிபர் பதில். சோவித் யூனியன் அமைப்பில் இருந்து உக்ரைன் தனி நாடாக பிரிந்ததை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டி வந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் எல்லையில் ராணுவ படைகளை குவித்து வந்தது ரஷ்யா. இதனால் கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், நேற்று முந்தினம் […]
ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும் என தெரிவித்துள்ளார். உக்ரைனில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வை நெருங்கி வருகிறது. அங்கு ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அச்சம் காரணமாக ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதுவரை நடந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து […]