ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பிராந்தியமான டொனெட்ஸ்கில் நடந்த சாலை விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்கில் ரஷ்ய வீரர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று மினிபஸ் மீது மோதியதில் 16 பேர் உயிரிழந்ததாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் தலைவர் டெனிஸ் புஷிலின் தெரிவித்தார். ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களான ஷக்தார்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்டில் உள்ள டோரெஸ் ஆகிய நகரங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்துள்ளது.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் உக்ரைனிலுள்ள சிறுமிகளை ரஷ்ய ராணுவத்தினர் கற்பழித்து வருவதாக செய்திகள் வெளியாகி பலரது கண்டனத்தையும் பெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தினரால் அரங்கேறும் மேலும் கொடுமையான ஒரு விஷயம் தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அதாவது ரஷ்ய ராணுவத்தினரால் உக்ரைனிலுள்ள பெண்கள், சிறுமிகள் மட்டுமல்லாமல் ஆண்கள் மற்றும் சிறுவர்களும் பலாத்காரம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது என ஐநா அதிகாரிகள் […]