ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக சாவர்க்கர் படத்தை போட வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபை கூறியுள்ளது. இந்துத்துவ மதவெறி அரசியலின் முன்னோடி வி.டி. சாவர்க்கர் என்ற விநாயக் தாமோதர் சாவர்க்கர்.மகாத்மா காந்தி படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டிக்கொடுத்ததே இவர்தான் என்று குற்றம் சாட்டப்பட்டவர். கோட்ஷே-யின் குருநாதர். விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் வகையில், வெள்ளைக்காரர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, அந்தமான் சிறையிலிருந்து விடுதலையானவர். இவரது படத்தைத்தான் தற்போது ரூபாய் நோட்டில் […]