திருப்பதி சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் கவிழ்ந்த தீயணைப்பு வாகனம். திருப்பதி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் இன்று தீயணைப்பு வாகனம் ஓன்று கவிழ்ந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த விமான நிலைய இயக்குனர் எஸ்.சுரேஷ் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். பின்னர், 2 அரை மணி நேரத்தில் ஓடுபாதையில் இருந்துதீயணைப்பு வாகனம் அகற்றப்பட்டது. இந்த விபத்து நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்து ஒரு விமானம் தரையிறங்கவிருந்தது, பின்னர் அந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து அங்கோரேஜ் என்ற இடத்திலிருந்து உனாலஸ்கா தீவிலுள்ள டச்சு ஹார்பருக்கு பென் ஏர்வேல் விமானம் சென்றது. இந்த விமானத்தில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் உட்பட 38 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் டச்சு ஹார்பர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலைதடுமாறி ஓடுபாதையை தாண்டி சென்றது. இதனால் அருகிலிருந்த ஆற்றின் கரையில் வேகமாக மோதி நின்றது. நல்லவேளையாக விமானம் ஆற்றுக்குள் செல்லாததால் விமானத்தில் இருந்த அனைவரும் உயிர்தப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு […]