சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடைசியாக முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதில் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் விளையாடுகையில் , தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அப்போது முதல் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னிற்கு அழைக்க அப்போது ஜெய்ஸ்வால் அதனை மறுத்து இருப்பார் . […]