#BREAKING: அடுத்தடுத்து பரபரப்பு.. மேயர் வீட்டில் தீ வைப்பு.. ஆளும்கட்சி எம்பி ஒருவர் உயிரிழப்பு!
இலங்கையில் ஏற்பட்ட வன்முறையில் ஆளும்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற எம்பி ஒருவர் உயிரிழப்பு என தகவல். இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சற்றுமுன் தகவல் வெளியாகியிருந்தது. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையிலும், அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, பல இடங்களில் வன்முறை வெடித்து, கலவரமாக உருவெடுத்துள்ளது. இதனால் அடுத்தடுத்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. […]