கர்நாடக உள்துறை செயலாளராக முதல் பெண் அதிகாரி நியமனம். கர்நாடக அரசு உயர் காவல் அதிகாரிகள் 17 பேரை, பணியிடமாற்றம் செய்தது. இந்த மாற்றத்தின் அடிப்படையில், ரயில்வே ஐ.ஜி.யாக இருந்த பெண் அதிகாரி ரூபா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியை ஏற்கும் முதல் பெண் அதிகாரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக ரூபா இருந்தபோது, சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதாக சர்ச்சையை எழுப்பி இருந்தார். இந்நிலையில், கர்நாடக மாநில உள்துறை […]