சென்னை:ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு ஏற்பாடு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகம் முழுவதும் நேற்று 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னையில் நேற்று மட்டும் 8978 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள்,நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் மருந்து தொகுப்பு தர ஏற்பாடு […]
கேரளா:சபரிமலைக்கு வரும் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா நெகடிவ் (ஆர்டி-பிசிஆர் சோதனை) சான்றிதழ் தேவையில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது. மிகவும் பிரபலமான சபரிமலை திருவிழாவை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கேரள அரசு, ஆர்டி-பிசிஆர் சோதனை சான்றிதழ் இல்லாமல் சபரிமலை யாத்திரைக்கு 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அனுமதிக்கலாம் என்று அறிவித்துள்ளது.எனினும்,குழந்தைகள் சோப்பு, சானிடைசர், முகமூடி போன்றவற்றை வைத்திருப்பதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்யுமாறு பெற்றோர்கள் அல்லது குழந்தைகளுடன் வரும் பிற […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் டி.நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,ஹைதராபாத் அணி வீரர், T நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,அவருடன் தொடர்பில் இருந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், அணி மேலாளர் விஜய் குமார், பிசியோதெரபிஸ்ட் ஷ்யாம் சுந்தர் ஜே, மருத்துவர் அஞ்சனா வண்ணன், தளவாட மேலாளர் துஷார் கேட்கர் மற்றும் நெட் பந்துவீச்சாளர் பெரியசாமி […]
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் க்கு திரும்ப இந்தியாவிலிருந்து வர அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் சரியான விசா வைத்திருந்தால் செப்டம்பர் 12 முதல் அனுமதி. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் க்கு பயணிக்க விரும்பும் பயணிகள் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மற்றும் முறையான விசா வைத்திருந்தால் அவர்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளது. இந்த முடிவு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, […]
தடுப்பூசி எடுத்து கொண்டவர்களும் இனிமேல் மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் நுழைய ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும், அடுத்த கட்டமாக கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு மாநிலங்களிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போதும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 ,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]