இனி இவர்களுக்கு ரூ.3000 ஊக்கத்தொகை – இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!
ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சி பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி,ஓதுவார் பயிற்சி பள்ளியில் 3 ஆண்டு கால படிப்பு முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.ஆனால்,கடந்த 3 ஆண்டு காலமாக ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் இருந்த நிலையில்,திமுக ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து பயிற்சி பள்ளியில் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. […]