தொழில்நகரமான திருப்பூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.250 கோடியா? என தற்போது சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனத்தை தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி அமைக்க திட்ட மதிப்பீடு ரூ.250 கோடி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி அமைக்க இவ்வளவு தொகையா? என்று தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனம் […]