அதிமுகவின் வாக்குறுதிகள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக இலக்கிய அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி தான். இதன் மூலமாகவே அவர் தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர் என்பது தெரியவருவதாக கூறியுள்ளார். மேலும் […]
வருகின்ற ஜனவரி 16-ல் அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். வருகிற ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்று பெற்று இருப்பவர்கள் மட்டுமே காளையுடன் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் எனவும், அதிகபட்சமாக 300 பேர் வரையிலும் கலந்து கொள்ளலாம் எனவும், 7 நாட்களுக்கு […]
8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவினால் ஆட்சிக்கு வர முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுத்தேர்தல் சில மாதங்களிலேயே நடக்க உள்ளதால் அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு அமைச்சர்களும் விமர்சித்தி வருகின்றனர். அந்தவகையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், 8 மாதங்களில் தேர்தல் வரும்போது அதிமுகவுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என கூறிய அவர், […]
மத்திய அரசின் கவனத்திற்கு ஆன்லைன் கேம்மான PUBG செயலிக்கு தடை விதிப்பது குறித்து கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறியுள்ளார். உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் கேம்களை விளையாடும் பழக்கமுடையவர்கள். அந்த வகையில் அனைவரையும் ஈர்த்துள்ள ஆன்லைன் கேம் PUBG. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலர் இந்த கேம்மில் அடிமை ஆகியுள்ளனர். தூக்கமில்லாமல் விளையாடும் இந்த கேம்மினால் பலர் தற்கொலையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற என கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பீகார் சட்டமன்றத்தில் என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கும் நிலையில் மு.க ஸ்டாலின் இந்த கோரிக்கையை வைத்துள்ளார். மேலும் என்.பி.ஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா..? […]