சென்னை அயனாவரத்தில் போலீஸாரால் என்கவுண்டர் செய்துகொள்ளப்பட்ட ரவுடி சங்கரின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னை அயனாவரத்தில் கடந்த 21ஆம் தேதி அதிகாலை சென்னை காவல் துறையினரால் பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி சங்கர் மீது 4 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உட்பட 50 வழக்குகள் உள்ளது. இவர் மீது 5 முறை வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது, 9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]