சென்னை: சென்னை பெரம்பூரில் ரவுடி அறிவழகனை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடியான அறிவழகனை பிடிப்பதற்காக பனந்தோப்பு சென்ற போலீசாரை, அவர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக அவரை காலில் சுட்டு காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் டித்துள்ளார். இன்று அதிகாலையில் பொது இடத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த என்கவுண்டர்கள், ரவுடி சுட்டுக்கொலை செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னரே, காவல்துறையினரின் ‘கடும்’ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன எனக் கூறப்படுகிறது. சென்னை புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பதவியேற்றபிறகு இதுவரையில் சென்னையில் மட்டும் 3 ரவுடிகள் போலீஸ் […]
மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல் துறையின் முக்கிய பொறுப்பாகும் என ஈபிஎஸ் அறிக்கை. ஆபரேஷன் மின்னலின் கீழ் கைது செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாட விட்டதன் மர்மத்தை விளக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் விடியா அரசின் ஆட்சியில், நிர்வாகத் திறமையற்ற, தடுமாறும் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பல்வேறு விசித்திரங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 16 மாத […]
தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் கைது. தமிழ்நாடு முழுவதும் போலீசார் நடத்திய ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 133 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 133 பேரில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர் மற்றும் மின்னல் ரவுடி வேட்டையில் பல ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்த 13 ரவுடிகளும் தற்போது பிடிபட்டனர். தமிழ்நாடு […]
பெங்களூருவில் பரத் (ரவுடி) தினேஷ் என்ற இன்ஸ்பெக்டரை விட்டு ஓட முயன்ற முயற்சி செய்தார் . இதனால் இன்ஸ்பெக்டர் லோகித் என்பவர் பரத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார். பெங்களூரு சேர்ந்த பரத் என்பவர் பிரபல ரவுடி இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். இவரது மீது கொலை, கொள்ளை என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் உள்ளன.இதனால் பரத் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.கடந்த 22-ம் தேதி உத்தரபிரதேச பதுங்கி இருந்த பரத்தை பெங்களூரு போலீசார் […]
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சோழன் இவர் மீது காலப்பட்டு சந்திரசேகர் கொலை , முத்தியால் பேட்டை ரவுடி அன்பு ரஜினி கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சோழன் தற்போது காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் கொலை வழக்கு விசாரணைக்காக மத்திய சிறையில் இருந்து சோழனை புதுச்சேரி காவல் துறையினர், புதுச்சேரி நீதிமன்றத்தில் அழைத்து வந்தனர். அப்போது ரவுடி சோழன் கூலிங்கிளாஸ் […]
தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை திருமண செய்வதாக கூறி புத்திசாலிதனமான கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்ட்டர். உத்திரபிரதேசம் மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள பிஜோரி கிராமத்தை சேர்ந்து பால்கிஷன் சவுபே என்பவரின் மீது கொலை மற்றும் கொள்ளை போன்ற 16 வழக்குகள் போடப்பட்டுள்ளதால், போலீசிடம் பிடி படாமல் தப்பித்து வந்துகொண்டிருந்தார். இதனால் அவரை பற்றி தகவல் சொல்லுபவருக்கு காவல்துறை சார்பாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பால்கிஷன் சவுபே ரவுடியின் போன் நம்பரை கண்டுபிடித்த […]
தஞ்சாவூர் மாவட்டம் கூத்தங்குழி கிராமத்தில் கடந்த ஆண்டுஅய்யனார் கோவிலில் கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் உறவினர்களுக்கிடையில் நடைபெற்ற பிரச்சனையில் மணிகண்டன் என்பவர் ஒருவரை தாக்கியத்தில் காயமடைந்து உள்ளார். இதனால் மணிகண்டனை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து திருச்சியில் உள்ள சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் மணிகண்டன் ஒருமாத ஜாமினில் வெளியில் வந்து உள்ளார். நேற்று காலை ஆடுகளுக்கு புல் வெட்ட மணிகண்டன் வயலுக்கு சென்று உள்ளார்.அப்போது அங்கு மறைந்து இருந்த 10-க்கும் மேற்பட்டோர் மணிகண்டனை கட்டையால் […]
கர்நாடகவில் உள்ள காங்கிரஸ் கட்சியை சார்ந்த 14 ,மதசார்பற்ற ஜனதாதன கட்சியை சார்ந்த 3 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவாக செலயல்பட்டதால் எம்எல்ஏக்களை முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரியே என தீர்ப்பு அளித்தது. மேலும் 2 பேரின் வெற்றி ஏற்கனவே செல்லாது என வழக்கு உள்ள நிலையில் மீதம் முள்ள […]
விழுப்புரத்தை சார்ந்த ரவுடி மணி என்பவர் மீது எட்டு கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது. சென்னை கோரட்டூரில் மணி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவரை பிடிக்க விழுப்புரம் போலீஸார் சென்னை சென்றுள்ளனர். அவரை பிடிக்க சென்ற இடத்தில் ஆரோவில் எஸ்.ஐ பிரபு என்பவரை ரவுடி மணி கத்தியால் தாக்கி உள்ளதாக தெரிகிறது. இதனால் போலீசார் மணியை துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடி மணி […]
கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஏரிமேடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஜோஸ்வா என்ற ரவுடி கடந்த 18-ம் தேதி கடத்தி நான்கு நாள்களாக பலாத்காரம் செய்து உள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை அடிப்படையாக வைத்து கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஜோஸ்வா புலியகுளம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்றனர்.போலீசார் வருவதை பார்த்த ரவுடி […]
தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.இந்நிலையில் ரவுடி பேபி பாடல் […]