கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசல் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. மத்திய அரசு கொடுத்துள்ள இந்த அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரி ஒவ்வொரு லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கலால் வரி என்பது எரிபொருள் விலையில் சேர்க்கப்படும் ஒரு முக்கிய அம்சம் என்பதால், கலால் வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருந்தனர். […]