திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனத்திற்கான டோக்கன் நேற்று அதிகாலை திருப்பதியில் 7 இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்திலும் கொடுக்கப்பட இருந்தது. இதனை வாங்க நேற்று முன்தினம் இரவில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது. திருப்பதி எம்ஜிஎம் பள்ளிக்கு அருகே உள்ள கவுண்டரில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டத்தால் முண்டியடித்துக்கொண்டு வரையில் முன்செல்ல முற்பட்டனர். அப்போது […]
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில் பக்தர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மல்லிகா குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 2 லட்சம் நிவாரணமும், 6 பேர் குடும்பத்தினருக்கும் ஆந்திர அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இதனையடுத்து, கூட்ட நெரிசலில் சிக்கி […]
சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகளுக்கு மறக்க முடியாத வகையில் ஒரு திரைப்படம் கண்டிப்பாக இருக்கும். அப்படி தான் மதுவுக்கும் ‘ரோஜா’ திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிக்பெரிய வெற்றியை பெற்று மதுவின் பெயரையும் முகத்தையும் வெளிக்கொண்டு வர உத்தரவு செய்தது என்றே கூறலாம். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தான் மதுவுக்கு தமிழ், ஹிந்தி மொழிகளில் பட வாய்ப்புகள் வர தொடங்கியது என்றே சொல்லலாம். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட […]
நடிகை ரோஜா திரைத்துறையில் நடிக்க நுழைந்த ஆரம்ப காலகட்டத்தி இருந்தே நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அது மட்டுமின்றி படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டும் மின்றி மற்ற படங்களில் ஒரு பாடலில் நடனமாடுவது , மற்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதிலும் நடித்து வருகிறார். பொதுவாகவே நடிகைகள் என்றாலே தங்களுக்கு ஹீரோயின் ரோல்கள் கிடைத்து முக்கிய துவம் இருக்கும் கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டும் தான் நடிப்பார்கள். ஆனால், […]
மாமியார் வீடான தமிழகத்தின் பெருமையை மெச்சும் வண்ணம் ஆந்திராவில் சிறப்பாக பணியாற்றுவேன் என ரோஜா பேட்டி. ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் விளையாட்டு இளைஞர் நலன் துறை அமைச்சர் ரோஜா அவர்கள் இன்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் சூழ்ந்து கொண்ட நிலையில், அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். சாமி தரிசனத்திற்கு பின்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆந்திராவில் தன்னை சுற்றுலா விளையாட்டு, கலாச்சாரத் துறை அமைச்சராக […]
இனி சினிமாவிலும், டெலிவிஷனிலும் நடிக்க மாட்டேன் என ரோஜா பேட்டி. ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.அப்போது,இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அண்மையில் அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடிகை ரோஜா உட்பட 25 அமைச்சர்கள் பதவியேற்றனர். மாநில தலைநகர் அமராவதியில் […]
ஆந்திராவில் எம்எல்ஏ ரோஜாவுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் ஆட்சி அமைத்தது. அப்போது, இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதன்படி, ஆந்திராவில் மாற்றியமைக்கப்பட்ட முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் ரோஜா உள்பட 25 பேர் இன்று புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அம்மாநில ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், 25 அமைச்சரவை […]
ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய அமைச்சரவையில் ரோஜாவுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திர மாநிலத்தில் நாளை காலை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இந்த புதிய அமைச்சரவையில் 25 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 15 புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமாகிய ரோஜாவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரோஜாவும் நாளை காலை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
ரோஜா இளைஞர்களுடன் திடீரென்று களத்தில் இறங்கி கபடி விளையாடி உள்ளார். நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர். இந்நிலையில், நகரி பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைக்குமாறு ரோஜா சென்று இருந்தார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். இவர்களின் வரவேற்பில் உற்சாகமடைந்த ரோஜா இளைஞர்களுடன் திடீரென்று களத்தில் இறங்கி கபடி விளையாடி உள்ளார். ரோஜாவின் இந்த செயல் […]
நடிகை ரோஜா, அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் 90ஸில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.இயக்குனர் ஆர். கே. செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம். எல். ஏ மற்றும் ஓய்.எஸ்.ஆர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவர்.இவர் கடைசியாக 2015ல் கில்லாடி, புலன் விசாரணை 2 உள்ளிட்ட ஒரு சில […]
பூக்களின் மீது நடந்து சென்றதால் நடிகை ரோஜா மீது வழக்கு திடீர் வழக்கு பதிவு. தமிழ் சினிமாவில் 90ஸில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.இயக்குனர் ஆர். கே. செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம். எல். ஏ மற்றும் ஓய்.எஸ்.ஆர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவர். தற்போது ரோஜா கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் […]
அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படி ஒரு பொறுப்பற்ற செயலை செய்யலாமா என ரோஜா குறித்து கேள்வி எழுப்பும் சமூகவலைதளவாசிகள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், மக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காக, அனைத்து கடைகளும், பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தை சார்ந்தவர் ரோஜா. இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர் காரை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரோஜா கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரோஜா , ராஜேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் சம்மதம் தெரிவித்து உள்ளார்.இதை அடுத்து ராஜேஷ் ஒரு வாரத்திற்கு முன்பு ரோஜாவை அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் […]
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்ட பேரவை தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.இந்த வெற்றியை தொடர்ந்து ஆந்திரா மாநிலத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் நடிகை ரோஜா தனது தொகுதி மட்டுமல்லாமல் மற்ற தொகுதியிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் தான் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என பரவலாக பேசப்பட்டது. ஆகையால் நடிகை ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என […]
ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஜெகன் அமைச்சரவையில் 25 அமைச்சர்களை நியமனம் செய்தார். இந்நிலையில் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் தலைவராக நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் 19 லட்சம் வாக்காளர்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு காணாமல் போக செய்துள்ளார் என காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நடிகையுன ரோஜா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அரசு செயல்பாடு குறித்து பொது மக்களிடம் செல்போன் மூலம் கருத்து அறிந்து வருவதாக கூறுகிறார்.அரசின் நலத்திட்டங்கள் சென்றடைந்து உள்ளதா என்று கேள்வி கேட்டு, நலத்திட்டங்கள் கிடைத்தது என்றால் எண் ஒன்றை அழுத்த […]