இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரஞ்சி டிராபி போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யமுடியாமல் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளார். ஏற்கனவே, நடந்து முடிந்த ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஐந்து இன்னிங்ஸ்களில் மொத்தமாகவே, 31 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அவர் மீது பல விமர்சனங்களும் கொட்டப்பட்டது. விமர்சனங்கள் அனைத்திற்கும் […]