7 செயற்கை கோள்களை எலக்ட்ரான் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக ராக்கெட் லேப் நிறுவனம் அறிவித்துள்ளது. ராக்கெட் லேப் என்பது அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் விண்வெளி நிறுவனமாகும். இந்த நிறுவனம் ராக்கெட் போன்ற விண்வெளி சாதனங்களை தயாரித்தும், ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் பணியையும் செய்து வருகிறது. எனவே தனது வாடிக்கையாளர்களின் செயற்கை கோள்களை எலக்ட்ரான் என பெயரிடப்பட்டுள்ள இலகு ரக ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி வருகின்றனர். […]