புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ ராணுவ தளபதியாக 1949ஆம் ஆண்டு ஜனவரி 15இல் பீல்ட் மார்ஷல் கே.எம். கரியப்பா நியமனம் செய்யப்பட்டார். அதனை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 15இல் ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ராணுவ தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் BEG & சென்டர் பரேட் மைதானத்தில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ராணுவ அணிவகுப்பில் […]