திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடத்தி செல்லப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை மகாராஷ்டிரா மாநிலத்தில் போலீசார் பத்திரமாக மீட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த ஜீ ஜதேவ், தீபிகா தம்பதியினர் தங்களது ஒன்றரை வயது குழந்தை வீரேஷுடன் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி கோயிலுக்கு வந்தனர். தங்கும் அறை கிடைக்காததால், கோயிலில் உள்ள திறந்தவெளி மண்டபத்தில் தூங்கியதாக தெரிகிறது. அதிகாலையில், தீபிகா விழித்துப் பார்த்த போது, குழந்தை வீரேஷை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, ஜதேவ் அளித்த புகாரின்பேரில் திருமலை […]
சென்னை நுங்கம்பாக்கத்தில் அப்பலோ மருத்துவமனை மருத்துவர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.அதே போல சென்னையில் தேனாம்பேட்டை , வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் செல்வந்தர் வீடுகளில் கொள்ளை நடைபெற்றதால் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அப்போது இந்த கொள்ளையர்கள் கூகுள் மேப் உதவியுடன் அதிக செல்வர்ந்தர் இருக்கும் இடமான வீடுகளை தேர்வு செய்து , அந்த வீடுகளை ஆட்டோ-வில் சென்று நோட்டமிட்டு , கையுறைகள் , முகமூடி பயன்படுத்தி போலீசாரால் கண்டுபிடிக்க முடியாதளவு கொள்ளையை நிகழ்த்தியுள்ளது […]
கோலாலம்பூருக்கு கடத்த இருந்த 2.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் திருச்சி விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்ர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவரை சோதனை செய்ததில் ஆசனவாயில் மறைத்து வெளிநாட்டு பணம் எடுத்த செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, வெளிநாட்டு பணம் 2.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த மத்திய […]
வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய சிவகங்கையை சேர்ந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டி பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் ஓய்வுபெற்ற நில அளவையர் வீட்டின் பூட்டை உடைத்து, 16 சவரன் நகை மற்றும் 83 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையனை காவல்துறையினர் தேடிவந்தனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் சிவகங்கையை சேர்ந்த செந்தில்குமார் […]
சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம் தனலட்சுமி நகரைச்சேர்ந்தவர் டேவிட் பால்ராஜ்(வயது 53). தொழில் அதிபர். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பணத்தை எடுத்து, பையில் வைத்துக்கொண்டு காரில் வீட்டுக்கு சென்றார். அப்போது விருகம்பாக்கம் குமரன் காலனி அருகே அவர் காருடன் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 2 திருநங்கைகள், டேவிட்பால்ராஜை ஆசீர்வாதம் செய்தனர். அவர் காரில் வைத்திருந்த பணப்பையையும் ஆசீர்வாதம் செய்து தருவதாக கூறினர். அதை நம்பி அவரும் பணப்பையை […]