வைரல் வீடியோ : நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகள் சொல்லி தெரிய வேண்டியவை இல்லை. இந்த விபத்துக்களை தடுக்க நாம் சாலை விதிகளை கடைபிடித்தாலே போதுமானது. ஆனால், சிலரது அலட்சியத்தாலும், கவன குறைபாடலும் தினம் தினம் விபத்துகள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டே தான் இருக்கிறது. தற்போது, பெங்களூரில் நடந்த சாலை விபத்து தொடர்புடைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், ஆக்டிவா ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்த இரு இளைஞர்கள், சாலையின் வலது பக்கத்தில் […]
சென்னை : செங்கல்பட்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழமத்தூர் கிராமத்தில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 20 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]
சென்னை : மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பழமத்தூர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிரானைட் கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி பழுதாகி நின்றது. இதன் காரணமாக பின்பே வந்த ஆம்னி பேருந்து ஒன்று லாரி மீது மோதியதால் அதிகாலை கோர விபத்து ஏற்பட்டது. […]
கர்நாடகாவில் சிக்கபல்லபுரம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்கபல்லபுரம் மாவட்டம் பாகெப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்பறம் கார் மோதி ஒரு குழந்தை, பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற கார் நிறுத்தப்பட்டிருந்த லாரி மோதி விபத்தில் சிக்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து 3 வயது குழந்தை, பெண்கள் மற்றும் ஆண்கள் என மொத்தம் 14 பேர் டாட்டா சுமோவில் […]
மணிப்பூரில் இன்று பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தார் அம்மாநில முதல்வர். மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் இன்று சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பீஸ்னுபூர் – கெளபம் சாலையில் 2 பேருந்துகள் சென்றபோது மாணவர்கள் பயணம் செய்த பேருந்து விபத்தில் சிக்கியது. இம்பாலில் இருந்து 55 கிமீ தொலைவில் உள்ள லாங்சாய் மலை பிரதேசத்தில் பேருந்து […]
உத்தரப்பிரதேசத்தில் லாரி – பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு, 25 பேர் படுகாயம். உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று லாரி மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தானது சாரதா ஆற்றின் பாலத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தௌர்ஹாராவிலிருந்து லக்கிம்பூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது. காலை 7:30 மணியளவில், பஹ்ரைச் நோக்கிச் சென்ற பேருந்தும், […]
சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு 5000 ருபாய் பரிசு வழங்கப்படும் என போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூபாய் […]
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சென்னையில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், விபத்துகளில் 107 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.