ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தின் மச்சிலிபட்னத்தில் உள்ள போலீஸ் பரேட் மைதானத்தில் ரோலரைப் பயன்படுத்தி ₹ 72 லட்சம் மதிப்புள்ள 14,000 மது பாட்டில்களை போலீசார் உடைத்து நொறுக்கினர். இந்த பாட்டில்கள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கிருஷ்ணா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையின்போது இந்த மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ரவீந்திரநாத் பாபு தெரிவித்தார். ஆந்திராவில் 72 லட்சம் மதிப்புள்ள 14,000 […]