ADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் (வயது 97) முதுமை காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த ஆர்.எம்.வீரப்பன், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் கணக்காளராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி […]