ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வென்றதையடுத்து, ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டு பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது எனவும் அதேபோல் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறாமல் அதிமுக முழுமையான ஒத்துழைப்பு அளித்தது என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்
வாக்குப்பதிவு தினமான இன்று ஹவாலா பாணியில் பணமானது வாக்காளர்களுக்கு வாரி இறைக்கப்பட்டது.பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி விலை மதிக்க முடியாத 24,651 வாக்குகளை திமுக பெற்றது.ஆகையால் இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்பது திமுகவுக்கு தோல்வி இல்லை,மாறாக அது தேர்தல் ஆணையத்தின் தோல்வி என கூறியுள்ளார் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின்
18வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் படி, டி.டி.வி தினகரன்(சுயேட்சை) : 86,472 மதுசூதனன் (அதிமுக): 47,115 மருதுகேணஷ் (திமுக): 24,075 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி): 3,645 நோட்டா: 2,096 […]
ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள்: சுற்று- 17: ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 76,701 மதுசூதனன் ( அதிமுக ) : 41,529 மருதுகணேஷ் ( திமுக ): 21,827 கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) : 3,535 கரு நாகராஜன் ( பாஜக ) : 1,128 நோட்டா : 2,096 source: dinasuvadu.com
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகம் வெல்லவில்லை,மாறாக அங்கு ஆளும்கட்சியின் பணநாயகம் தான் வென்றுள்ளது எனவும்,இத்தேர்தலில் வாக்களர்களுக்கு அதிகளவில் பணம் அளித்துள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தலில் இழந்த வாக்குகளை பாஜக மீண்டும் மீட்டெடுக்கும் என தெரிவித்துள்ளார் பிஜேபி வேட்பாளர் கரு.நகராஜன்
இன்று தருமபுரி பாராளுமன்ற தோகுதிக்குட்பட்ட, தருமபுரி சட்டமன்ற தோகுதியில் உள்ள குமாரசாமிபேட்டை இரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை பர்வையிட்டு ஆய்வுசெய்தார் பாமகவின் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை’ எனத் தெரிவித்துள்ளார்.
தினகரனின் நம்பிக்கை தரும் பேச்சு, செயல் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. அவர் நம்பிக்கையளிக்கும் வகையில் தேர்தலை எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என பாஜக ஊடக பிரிவு தலைமை நிர்வாகி நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகம் மட்டுமன்றி இன்று மேற்குவங்கத்தில் ஒரு தொகுதி,உத்திரப்பிரதேசத்தில் ஒரு தொகுதி மற்றும் அருணாசலப்பிரதேசத்தில் இரு தொகுதிகளிலும் மொத்தம் இந்தியா முழுமைக்கும் சுமார் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தின் ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி தினகரனும், மேற்கு வங்கத்தின் சபாங்கில் திரிணாமுல் காங்கிரஸ்யின் கீதா புனியா,அதே போன்று உத்தரபிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.