டி.டி.வி. தினகரன் தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவது பகல் கனவு என்று துணை-முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் […]
கேரளாவிற்கு தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி நிர்வாகம் சார்பில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு உதவும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி நிர்வாகம் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் சார்பில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. DINASUVADU
நீலகிரியில் மசினகுடியில் குடியிருப்பு கட்டடங்களுக்கு சீல் வைப்பதை எதிர்த்து 3நாட்களுக்கு கடையடைக்கப்பக்கப்பட்டுள்ளது. மசினகுடியில் சுற்றுலா வாகனங்களும் இன்று முதல் 3நாட்களுக்கு இயக்கப்படாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் மசினகுடியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள குடியிருப்பு கட்டடங்களை அக்கற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். DINASUVADU
தமிழக அரசு வறட்சி மாவட்டங்களில் நீர்நிலைகளை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.மேலும் காவிரி பாசன மாவட்டங்களில் கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். DINASUVADU
இயக்குனர் பா.ரஞ்சித் தான் எடுத்து முன் வைக்க விரும்பும் அரசியல் கருத்துக்களை தனது படங்களிலும் எந்தவித சமரசமும் இன்றி எடுத்து காட்டுபவர். அதனால் தான் இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரே நடித்தாலும் அவரையும் தாண்டி அவரது அரசியல் கருதுக்குகள் மக்கள் மனதில் தெரிகின்றன. இப்படி படம் எடுக்கும் திறமை பாலிவுட்காரர்களுக்கு பிடித்து போய் தற்போது இந்தியில் ஒரு வரலாற்று பின்புலம் மிக்க ஒரு படத்தை முன்னணி நடிகரை வைத்து படமாக்கும் வாய்ப்பை ஒரு முன்னணி பாலிவுட் சினிமா […]
திமுக தலைவர் கருணாநிதியின் மீது போற்றப்பட்ட தேசியக்கொடி ஸ்டாலினிடம் இராணுவ மரியாதையோடு கொடுக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜாஜி ஹாலுக்கு சென்றனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை சட்டச்சிக்கல் இருப்பதால் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
77 மதிப்பெண்களை மறு மதிப்பீட்டில் விதிகளை மீறி மாணவர் ஒருவர் பெற்றுள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, 2016 மே மாதம் முதல் 2018 ஏப்ரல் மாதம்வரை துணைவேந்தர் இல்லாத […]
இன்று அல்லது நாளை கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனை சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.ஆனால் நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 2ஆம் கட்ட பட பிடிப்பில் தீவிரமாக இருந்தார். இந்நிலையில் இன்று அல்லது […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டதா? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளிடம்,கலவரத்தின்போது காவல்துறை கடைப்பிடிக்க வேண்டிய விளக்க கையேடு வழங்கப்பட்டது. இது குறித்து நீதிமன்றம், தமிழக அரசுக்கு மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளது, 2 1.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டதா? 2.துப்பாக்கிச்சூட்டுக்கு வாய்மொழி அனுமதி பெறப்பட்டதா? 3.எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்பட்டதா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாம் தமிழர் கட்சியின் சீமான் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பாலிவுட் மட்டும் அல்லாமல் ஹாலிவுட் அளவில் மிகவும் பிரபலாமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியாங்கா சோப்ரா இடையே நிச்சயத்தார்தம் நடைபெற்றதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகின்றது.இது உண்மைய என்று பிரியாங்கா தரப்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.ஆனால் பிரியாங்கா காதலிக்கும் அமெரிக்க […]
மேட்டூர் உட்பட பல அணைகள் நான் பிரார்த்தனை செய்தது போன்று நிரம்பியுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,கடந்த முறை திருப்பதிக்கு நான் சென்றபோது அணைகள் அனைத்தும் நிரம்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய தண்ணீர் கிடைக்கும்.தமிழகத்திற்கு யார் தடுத்தாலும் தண்ணீர் கிடைப்பது உறுதி.சமவெளியாக காவிரியின் பாதை இருப்பதால் அணை கட்ட முடியாது.அப்படியே கட்டினால் நீர் ஊருக்குள் புகுந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் நீரை தேக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும்.விவசாயிகளுக்கு […]
இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நிலநடுக்கம் உருவாகியுள்ளது .இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.இதனால் அங்கு உள்ள பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரி சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .திருசெங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு என தகவல் வெளியாகியுள்ளது.சத்துணவு திட்டத்திற்கு பொருட்கள் வழங்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு சத்து மாவு விநியோகம் செய்யும் கிருஷ்டி நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் +2 படித்தவர்களை வேலைக்கு அமர்த்தக்கோரி வழக்கு ஓன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக வழக்கு ஓன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.இதில் குறைவான கல்வி தகுதி உடையவர்களை வேலைக்கு நியமிப்பதாக புகார் தெரிவித்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதுரை நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென் மாநிலங்களில் வாழும் வட இந்தியர்களின் எண்ணிக்கை மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 2001-2011ஆண்டுகளுக்குட்பட்ட பத்தாண்டுக்காலத்தில் 33விழுக்காடு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாள மொழி பேசுவோரின் எண்ணிக்கை 2001க்கும் 2011க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக்காலத்தில் குறைந்துள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களிலும் தென் மாநில மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேநேரத்தில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இந்தி, வங்காளி, ஒடியா மொழி பேசும் வட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தென்மாநிலங்களைத் தவிர்த்துப் பிற மாநிலங்களில் 2001இல் 8லட்சத்து இருபதாயிரம் தமிழர்கள் வாழ்ந்து […]
விஜயின் பிரம்மாண்ட பிறந்த நாள் போஸ்டர்கள் மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஒட்டியது அந்த பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் கடந்த ஜூன் 22-ம் தேதி பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். மதுரையில் விஜய்க்கு வாழ்த்து சொல்லி அவரது ரசிகர்கள் ஊரெல்லாம் பிரம்மாண்ட பிறந்த நாள் விழா போஸ்டர்களை ஒட்டி உற்சாகமடைந்தனர். நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வந்த நிலையில் நடிகர் விஜயையும் அவரது ரசிகர்கள் அரசியலுக்கு […]
இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக, 18 மாதங்களாக தொடர்ந்து சரிவை எதிர் கொண்டிருக்கிறது. பொருளாதார வல்லுநர்கள் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ள நிலையில், ரூபாய் மதிப்பிற்கு ஏற்பட்டுள்ள சரிவு கவலையளிப்பதாக கூறியிருக்கின்றனர்.புதன்கிழமை நிலவரப்படி, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாய் 68 காசுகளாக சரிந்தது. 18 மாதங்களாக தொடர்ந்து சரிவின் எதிரொலியாக முன்னெப்போதும் இல்லாத வகையில், ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிறது. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி இருந்ததை […]