ஒரு யூனிட் ஆற்று மணலின் விலையை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள்,ஏழை,எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லும் வகையில்,தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அறிக்கை வெளியிட்டார்.அதில்,”பொதுமக்கள்,ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் கட்டடமற்ற எவ்வித இதரபணிகளை மற்றும் எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு,இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் […]
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உட்பட்ட பகுதியான குருவிகுளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்து குருவிகுளம் போலீசார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரை அடுத்த தண்டரையில் உள்ள ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் அவர்களது 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்துள்ளது அனைக்கட்டு காவல்துறை. source: https://www.dinasuvadu.com