அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே மோதலுக்கான அபாயம் அதிகம் இருப்பதாக அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்றுவரும் வேளையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகள் செய்து வருவதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கான ரஷ்யாவின் தூதர் அனடோலி அன்டோனோவ், அமெரிக்க-ரஷ்யா உறவுநிலை வலுவிழந்து வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரு நாடுகளுக்கிடையே மோதலுக்கான அபாயம் அதிகரித்து வருவதாக அன்டோனோவ் கூறியதாக ரஷ்ய செய்தித்தொடர்பு நிறுவனமான TASS தகவல் தெரிவித்துள்ளது. […]