காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைவிற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் 87 வயதான திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இதனையடுத்து, அவரது உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றோம், […]