பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை ஸ்ரீ ஷியாம் சுந்தர் ரெட்டி நேற்று (அக்டோபர் 9ஆம் தேத ) காலமானார். 80 வயதான ஷ்யாம் சுந்தர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் இன்று (அக்டோபர் 10 ஆம் தேதி) காலை அஞ்சலிக்காக ஹைதராபாத்தில் உள்ள எம்எல்ஏ காலனியில் உள்ள தில் ராஜுவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், காலை 11 மணியளவில், நகரில் உள்ள மகாபிரஸ்தானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. […]