நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல, மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மதுரையில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருக சுந்தரத்தின், மகள் ஜோதி ஸ்ரீ துர்கா நாளை நடைபெறவுள்ள தேர்வுக்கு தொடர்ந்த பயிற்சி பெற்று வந்துள்ளார். இன்று அதிகாலை வரை தேர்வுக்கு படித்துள்ளர். தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]