வாகன சோதனையின் போது திருச்சியில் உயிரிழந்த பெண் உஷா கர்ப்பிணி அல்ல என பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சூரமங்கலத்தைச் சேர்ந்த ராஜா தனது மனைவி உஷாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, வாகன தணிக்கைக்கு நிற்காமல் சென்றதால் காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று உதைத்ததில் கீழே விழுந்து உஷா உயிரிழந்தார். உஷாவின் உடலை மடியில் வைத்துக் கொண்டு கதறியழுத அவரது கணவர் ராஜா, தனது மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறினார். […]
45 அரசு பேருந்துகள், 7 அரசு வாகனங்களை இன்ஸ்பெக்டர் காமராஜைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தற்போது புதிதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள சூலமங்களத்தைச் சேர்ந்தவர் ராஜா(37). இவர் கடந்த 7-ம் தேதி இரவு, 3 மாத கர்ப்பிணியான தனது மனைவி உஷாவுடன் (34) மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்காக, துவாக்குடி அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை […]
பைக்கில் இருந்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உதைத்ததால், விழுந்து உயிரிழந்த பெண்ணின் உடல், அடக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம், துவாக்குடி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர், காமராஜ் எட்டி உதைத்ததில், பைக்கில் கணவருடன் வந்த உஷா என்ற கர்ப்பிணி உயிரிழந்தார். இறந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் நேற்று காலை, 10:00 மணிக்கு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. கர்ப்பிணிப் பெண் இறப்புக்கு காரணமான இன்ஸ்பெக்டர், காமராஜ், கைது செய்யப்பட்டு, திருச்சி […]