காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‘ என் வாழ்நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாகவும்’ அதில் குறிப்பிட்டுள்ளார். துரதிஷ்டவசமாக அந்த ட்வீட் பதிவிட்ட நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே இயற்கை எய்தினார் சுஷ்மா சுவராஜ். இந்திரா காந்திக்கு பின்னர் இரண்டாவது பெண் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றியவர் சுஷ்மா சுவராஜ். இவர் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். […]