மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார். அவரது உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணி முதல் 3 மணி வரை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இவர், 1965-ம் ஆண்டு தனது தந்தை நந்த் கிஷோர் ரூயாவின் வழிகாட்டுதலின் கீழ் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கி பின் தனது சகோதரர் ரவியுடன் இணைந்து இந்த எஸ்ஸார் நிறுவனத்தை தொடங்கினார். […]