கோயம்புத்தூர் : மேட்டுப்பாளையம் அருகே பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (108) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட பாப்பம்மாள் 100 வயதைக் கடந்தும் விவசாயம் செய்து வந்தார். இதற்காக, இவருக்கு 2021-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, பாப்பம்மாளின் காலில் விழுந்து பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர், தான் விவசாயம் கற்ற […]