சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார். வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது குமரி அனந்தன் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் […]
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவு உயிர் பிரிந்தது. குமரி அனந்தன் தமிழ் இலக்கியத்திலும் தனி முத்திரை பதித்தவர். பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்றுத் தந்தவர் என்ற பெருமை இவரைச் சேரும். தற்போது, குமரி அனந்தனின் மறைவு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், […]